பருவதமலைக்கு சென்ற பிக் பாஸ் பவித்ரா, யாருடன் தெரியுமா? போட்டோஸ் இதோ.!!

பருவத மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிக் பாஸ் பவித்ரா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.
டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா.
இவர் நான்காவது இடத்தை பிடித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பவித்ரா சகப் போட்டியாளரான ரயானுடன் பருவதமலை ஏறி சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே பவித்ரா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன பிறகு பருவதமலைக்கு போக வேண்டும் என்று சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram