விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்.!
பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

sivakarthikeyan in parashakthi movie release update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகம் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் பட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விஜயுடன் சிவகார்த்திகேயன் மோத உள்ளாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் எக்காரணத்தைக் கொண்டோம் ஜனநாயகன் படத்துடன் நம் படம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது மட்டுமில்லாமல் ஜனநாயகம் வருவதற்கு முன்பு பராசக்தி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan in parashakthi movie release update