சாதாரண வீட்டில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறிய பிக் பாஸ் முத்துக்குமரன்..வீடியோ இதோ.!!
சாதாரண வீட்டிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறி உள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே முத்துக்குமரனுக்கு மக்கள் அதிகம் ஆதரவு கொடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் பிக் பாஸ் டைட்டில் மற்றும் 40 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் சாதாரண வீட்டில் நண்பர்களுடன் இருந்த இவர் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடியேறி உள்ளார்.
இந்த வீடியோவை அவரது youtube பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலையில் அவரது நண்பர் சொந்தமாக முத்துக்குமரன் வீடு வாங்கி இருக்காரு என்று சொன்னவுடன் அதற்கு முத்துக்குமரன் இதை ஹவுஸ் ஓனர் பார்த்தார்னா நடக்கிறதே வேறு என்று சொல்லி கிண்டல் அடித்து உள்ளார். மேலும் இது வாடகை வீடு மக்களே 40 லட்சத்திற்கெல்லாம் சென்னையில் புது வீடு வாங்குவது என்பது நடக்காத ஒன்று என்று கூறியுள்ளார். இருப்பினும் முத்துக்குமரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.