7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!
7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றையும் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை நடந்து வருகிறது முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். மேலும் ரவி கிருஷ்ணா இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார்.
ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இன்னும் இரண்டு வார படப்பிடிப்புகள் மட்டுமே இருப்பதாகவும் விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
