பிக் பாஸ் தமிழ் 10: இந்த வாரம் எலிமினேஷன் ரேஸில் 3 போட்டியாளர்கள்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு தொடங்கியுள்ளது. ஷதிகா மேற்கொண்ட நாமினேஷனைத் தொடர்ந்து, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி ஆகிய மூவரும் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் தங்களது பயணத்தைத் தொடர வேண்டுமெனில், இந்த வாரம் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மூவரும் உள்ளனர். இதனால் வீட்டிற்குள் பரபரப்பும், போட்டியும் அதிகரித்துள்ளது.
நட்பு, தனிப்பட்ட உறவுகள், விளையாட்டு வியூகங்கள் என பல்வேறு காரணிகள் இந்த வார நாமினேஷனில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி ஆகிய மூவரில் யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். மேலும், JioHotstar தளத்தில் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்வதுடன், பிக் பாஸ் வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் காணலாம்.
#Day3 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/Pmztzq0l4q
— Vijay Television (@vijaytelevision) September 9, 2026