இன்று நடந்த ஓபன் நாமினேஷன்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!
இன்று ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
அனைவரும் எதிர்பார்த்த வைல்ட் கார்ட் நேற்று நடைபெற்றது.அதில், ரியாத் தியாகராஜன், ரயான், சிவகுமார், மஞ்சரி நாராயணன், ராணவ், வர்ஷினி வெங்கட் போன்ற பிரபலங்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் நடக்கிறது அதில் பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆண்கள் அணியினர் சுனிதா மற்றும் சாச்சனா இருவரையும் சொல்ல பெண்கள் அணியில் இருந்து தீபக் மற்றும் அருணை டார்கெட் செய்து பேசுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram