மருமகள்களுடன் ஜாலியாக இருக்கும் ஈஸ்வரி, பாக்யா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
மருமகளுடன் ஜாலியாக விளையாடி சந்தோஷமாக இருக்கின்றனர் ஈஸ்வரி மற்றும் பாக்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் பாக்யா மற்றும் ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ஒரு ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்க எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க ஏதாவது ஆர்டர் இருக்கா என்று பாக்கியா கேட்க அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது நீங்களும் பாட்டியும் கொஞ்ச நாளா ரொம்ப பிரச்சனைகளை பேஸ் பண்ணி இருக்கீங்க அதனால இன்னைக்கு ஃபுல்லா ஜாலியா இருக்க போறோம் என்று சொல்ல இனியாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் என்று சொல்லுகின்றனர். அதற்கு ஜெனி பேமிலி ட்ரிப் எல்லாம் இன்னொரு வாட்டி போகலாம் இப்ப நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஃப்ரீயா இருங்க என்று சொல்லி ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். பிறகு நால்வரும் நடந்து கொண்டிருக்க அந்தநேரம் பார்த்து பாக்கியாக்கு போன் வர ஜெனி எடுத்துப் பேசுகிறார் உடனே செல்வி உங்க மருமகளுங்க உங்களை எங்க கூட்டிட்டு போயிருக்காங்க என்று கேட்க ஜெனி அது உங்களுக்கு தெரிஞ்சே ஆகணுமா உங்க அக்கா வந்து சொல்லுவாங்க ஏதாவது எமர்ஜென்சி நான் மட்டும் போன் பண்ணுங்க மத்தபடி போன் பண்ணாதீங்க என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
இங்க நிறைய இடம் இருக்கு நம்ம முதல்ல எங்க போகலாம் என்று அமிர்தா கேட்க உடனே பாக்யாத்த பீச்ச பத்தி தான் பேசுறாங்க அதனால நம்ம ஃபர்ஸ்ட் அங்க போகலாம் என்று சொல்ல அனைவரும் பீச்சுக்கு போய் நின்று இந்த இடம் ரொம்ப அருமையா இருக்கு என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அனைவரும் சந்தோஷமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க டைம் ஆயிடுச்சு சாப்பிட போகலாம் என்று ஜெனி சொல்லுகிறார். பிறகு ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து அனைவரும் சாப்பிடுகின்றனர். உடனே பாக்கியா செழியன் மற்றும் இனியா இருவரும் சாப்பிட்டு இருப்பாங்களா என்று கேட்க அதெல்லாம் சாப்பிட்டாங்க என்று ஜெனி சொல்லுகிறார் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க செல்வி ஆன்ட்டி தான் சொன்னாங்க என்று சொல்லுகிறார்.
உடனே ஈஸ்வரி பாக்யா மூணு மனச ரெடி பண்ணி வச்சுட்டு தான் இங்க வந்திருப்பா ஒன்னு வீட்ல இருக்கும் ஒன்னு ரெஸ்டாரண்ட்ல இருக்கும் ஒன்னு தான் இங்கே இருக்கும் என்று சொல்லி கிண்டல் செய்கிறார் ஈஸ்வரி.
பிறகு அனைவரும் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யாவிடம் நீ செய்த சாப்பாட்டை விட சூப்பரா இருக்கு பாக்கியம் சாப்பிடு என்று சொல்லுகிறார் உடனே பாக்யா முகம் மாற நான் செய்யறது கூட நல்லா இருக்கா அத்தை என்று சொல்ல ஆமாம்பாக்கியா கண்டஸ்டன்சி எல்லாம் அவ்வளவு சூப்பரா இருக்கு என்று பாக்யாவை வம்பு இழுக்க ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் சிரிக்கின்றனர். பிறகு சும்மா சொன்னேன் பாக்கியா உன் சமையலை விட எதுவும் நல்லா இருக்குன்னு நான் எப்போ சொல்லி இருக்கேன் சிக்கன் நல்லா இருக்கு பாரு சாப்பிடு என்று சொல்லுகிறார்.
சாப்பிட்டு முடித்த பிறகு அனைவரும் என்ன விளையாடலாம் என்று யோசித்த ஈஸ்வரி நாங்க எப்பவுமே கேரம்போர்டு விளையாடுவோம் அதுவே விளையாடலாம் என்று சொல்ல நால்வரும் உட்கார்ந்து ஜாலியாக கேரம்போர்டு விளையாடுகின்றன.
கேரம் போர்டு விளையாடும் முடித்துவிட்டு அனைவரும் செஸ் விளையாடுகின்றனர் பிறகு swimming pool லில் அனைவரும் உட்கார்ந்து கொண்டு பாலை வீசி விளையாடுகின்றனர். இப்போ டைம் 4 ஆயிடுச்சு செழியன் டீ குடிச்சிட்டு இருப்பாங்களான்னு தெரியலையே என்று சொல்ல அவங்க குடிச்சிருப்பாங்க இப்ப நீங்க குடிங்க டீ வந்துருச்சு என்று சொல்ல அனைவரும் டீ குடிக்கின்றனர்.
அவர்கள் என்ன எல்லாம் செய்கிறார்கள்? எப்படி எல்லாம் சந்தோஷமாக கவலைகளை மறந்திருக்கிறார்கள்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்