Web Ads

கணவரைப் பிரிந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!

கணவரை பிரிந்து விட்டதாக பிக் பாஸ் சம்யுக்தா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Bigg Boss Samyukta who separated from her husband

Bigg Boss Samyukta who separated from her husband

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.8 வது சீசனின் டைட்டிலை வென்றார் முத்துக்குமரன்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சம்யுக்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சம்யுக்தா கார்த்திக் சங்கர் என்பவரை பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் கொரோனா காலத்தில் துபாயில் ஒரு பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சம்யுக்தா அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார் தற்போது தனது பேப்பர் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.