புதிய பிசினஸ் தொடங்கிய சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மனைவி ஶ்ரீஜா..வைரலாகும் தகவல்.!!
சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் ஶ்ரீஜா புதிய பிசினஸ் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதே சீரியலில் கதாநாயகியாக நடித்த ஶ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் நடித்து வருகிறார். இந்நிலையில் கஃபே ஒன்று விலைக்கு வந்ததாகவும் இதற்கு முன் நடத்தியவர்களால் தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் ஸ்ரீஜா அதை வாங்கி பண்ணலாமுன்னு சொன்னது சரி என்று சொல்லிவிட்டேன்.
ஆனால் தற்போது கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிஞ்சதும் வீடு இன்று இருந்தவன் தற்போது கேரளா சென்று கபி வேலைகளை பார்க்க வேண்டியதாக உள்ளது ஆனால் நிர்வாகம் அனைத்தையும் ஸ்ரீஜா தான் பார்த்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
