Asuran Kannada Remake Update
Asuran Kannada Remake Update

அசுரன் திரைப்படம் மீண்டும் உருவாக இருப்பதாக கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.

Asuran Kannada Remake Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் அசுரன்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்க டிஜே, அம்மு அபிராமி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

மாஸ்டர் ட்ரைலர் பற்றி வெளியான முதல் விமர்சனம், எதிர்பார்ப்பை எகிற வைத்த நடிகர் – என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இப்படம் தற்போது தெலுங்குவில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்த படத்தில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இப்படம் சீன மொழியிலும் டப் செய்யப்பட இருப்பதாக இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து இருந்தன.

ஆனால் இதுகுறித்து கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளது என்னவென்றால் இப்படம் சீன மொழியில் டப் செய்யப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

தளபதி ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி.. விஜய் பட பாடல் படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிறுவனம்!

ஆனால் கன்னட மொழியில் ரிமேக் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. வெற்றிமாறன் உதவி இயக்குனர் ஒருவர் இப்படத்தை கன்னடத்தில் இயற்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கப்போவது யார் யார் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.