Theri Movie Song Record
Theri Movie Song Record

விஜய் பட பாடல் புதிய சாதனை படைத்திருப்பதை பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Theri Movie Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து பாடல்கள் வெளியிடப்பட்டன.

விஜய் தான் சூப்பர் ஸ்டார், அந்தப் பாட்டு தான் ரொம்ப பிடிக்கும் – ஓபனாக பேசிய தெலுங்கு நடிகர் (வீடியோ இதோ)

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் உள்ளிட்ட அனைத்து பாடல்கள் யூ ட்யூபில் பெரிய அளவில் பார்வையாளர்களை பெற்று வருகின்றன.

இது மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக வெளியாகிய பிகில் திரைப்படத்தின் பாடல்களை தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன.

இப்படியான நிலையில் விஜய், அட்லி கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படமான தெறி படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று புதிய சாதனையை படைத்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்த இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களில் ஒன்று ஈனா மீனா டீக்கா.

அஜித், விஜய், ரஜினி ஆகியோர் மட்டும் திரையுலகம் கிடையாது – ஆர்கே செல்வமணி பரபரப்பு பேச்சு

தற்போது இந்த பாடல் தான் யூட்யூப் பக்கத்தில் 69 மில்லியன்களுக்கும் மேலாக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து தற்போது திங் மியூசிக் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.