Arya

Arya Marriage : நடிகர் ஆர்யா பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஆர்யா. இவர் தற்போது கஜினிகாந்த் படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு வில்லனாக காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இது வேற மாதிரியான உறவு – ஆரவ் பற்றி ஒபனாக பேசிய ஓவியா!

கே.வி, ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் மோகன் லால் முக்கிய வேடத்தில் நடிக்க சாயீஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது.

தளபதியால் மாபெரும் நடிகருக்கு கிடைத்த ஆதரவு – அவரின் டீவீட்டை நீங்களே பாருங்க.!

ஏற்கனவே இது குறித்த கிசுகிசுக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஆர்யா மற்றும் சாயீஷாவின் திருமணம் மார்ச் 10-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.