Oviya and Aarav Relationship
Oviya and Aarav Relationship

Oviya and Aarav Relationship – ஆரவ்வுடனான உறவு வேற மாதிரியானது என ஓவியா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ்வும் ஓவியாவும். இவர்கள் இருவருமே தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இருவரும் காதலித்து வருவதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஓவியா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு நான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஆரவ் அவருடைய எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்துகிறார். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு வேற மாதிரியான உறவு. இதை நட்பு என்று கூட சொல்லலாம்.

எண்களின் உறவு குறித்து விரைவில் அறிவிப்போம் என கூறியுள்ளார். அப்போ காதல் கண்பார்ம் தானோ??