Arasan Soap Ayra
Arasan Soap Ayra

அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குட்டி பெண்ணின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arasan Soap Ayra : தமிழ் தொலைக்காட்சிகளில் விளம்பர படங்களில் நடித்து அதன் பின்னர் பிரபலமாகி வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாகவும் துணை நடிகையாகவும் நடித்து பிரபலமானவர்கள் பலர் உண்டு.

இவர் செய்ய.. அவன் பார்க்க, ஒரே ஜாலி தான் – பார்ட்னருடன் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட அஞ்சலி!

அந்த வகையில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என நடித்து அனைவரையும் கவர்ந்த குட்டி பெண்ணை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். இவரின் பெயர் அய்ரா.

இந்த விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த யாயும் என்ற பாடல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

OMG நடிகை இலியானாவுக்கு இப்படியொரு வியாதியா? என்ன கொடுமை இது? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!

மேலும் இவர் சகா என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நுங்கம்பாக்கம் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அந்த பெண்ணா இது? இவ்வளவு பெரிய நடிகையாகி விட்டாரா? என ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/ByUQphgj1rC/?igshid=1d3gvxqodg7tg

https://www.instagram.com/p/By6zgWmDMhk/?igshid=122oq6gd6jflr