ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடி யார் தெரியுமா?

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது, இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இவர் தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ‘இறவாக்காலம்’ மற்றும் ‘ஜீனி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அருண் மாதேஸ்வரன் படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ். ரஜினி-கமல் இணையும் படத்தினை இயக்கவில்லை என்பதால், லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் கார்த்தி நடிப்பில் ‘கைதி-2’ படம் தொடங்கப்பட உள்ளது.

wamiqagabbi the heroine of the film starring lokesh kanagaraj
actress wamiqagabbidirector lokesh kanagarajstoryகார்த்திலோகேஷ் கனகராஜ்