சூர்யா குரலில் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ பட பாடல் வெளியானது!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு, தற்போது அடுத்த பாடலாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பாடல், இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக மாறி வருகிறது.

திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு ஆகியோர் தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். குடும்பத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான திருமணத்தின் கொண்டாட்ட சூழலை திரையில் அழகாக பிரதிபலிக்கும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சமாக, நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், துள்ளலான இசை மற்றும் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாடலை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதியுள்ள வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக பிரதிபலிக்கின்றன.

ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பெற்று வருகிறது. அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளதால், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் Sithara Entertainments மற்றும் Fortune Four Cinemas நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். Srikara Studios நிறுவனம் படத்தை வழங்குகிறது.

சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Mamitha BaijuRadhika SarathkumarRaveena TandonsuriyaThe Wedding Songvishwanath and sonsViswanath & Sons Song Released in Suriya’s Voice