விமல் – ஸ்ரேயா கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘சண்டக்காரி’

‘த்ரிஷ்யம்’ புகழ் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் செயல்பட்டு வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி – ஊழியர் என எதிரெதிர் துருவங்களில் இருக்கும் விமல் மற்றும் ஸ்ரேயா இடையே ஏற்படும் சம்பவங்கள், மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தின் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையே நடைபெறும் ‘சண்டை’தான் படத்தின் முக்கிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது.

- Advertisement -

விமல் – ஸ்ரேயா இடையேயான மோதல்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய காமெடி அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல், ஸ்ரேயா, சத்யன் கூட்டணி திரையில் கலகலப்பான காட்சிகளை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். அம்ரீஷ் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’! என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் புதிய கூட்டணியாகவும் கவனம் பெற்றுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SandakkariShriyaVimalVimal and Shriya Join Forces for New Film Sandakkari