கில்லி, குஷியை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் மற்றொரு திரைப்படம்.. பிரபல விநியோகிஸ்தர் பேச்சு.!!

கில்லி குஷி படத்தை தொடர்ந்து விஜயின் மற்றொரு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யபட உள்ளது.

Vijay’s next film to be re-released after Gilli, Kushi.. Popular distributor talk.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான குஷி திரைப்படமும் வருகிற செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாக இருந்தது.

இந்த நிலையில் பிரபல விநியோகிஸ்தரான சக்திவேலன் என்பவர் விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக சொல்லி இருக்கிறார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay’s next film to be re-released after Gilli, Kushi.. Popular distributor talk.!!
GilliKushiKushi.. Popular distributor talk.!!Latest newsSakthi VelanTamil cinemaThalapathy VijayVijay's next film to be re-released after Gillivijayfansகில்லிகுஷிசிவகாசிதளபதி விஜய்ஜனநாயகன்