வேட்டையன் படத்தில் நடித்த ராணா டகுபதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
- Advertisement -
TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், ராணா டகுபதி , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில் இந்த படத்தில் நடித்த ராணா டகுபதி, 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.