வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார் சிம்பு. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் ‘தக்லைப்’ வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, ‘அரசன்’ படத்தின் மூலம் சிம்பு மீண்டும் வெற்றி பறிக்க முனைந்துள்ளார்.
அக்டோபர் மாதம் இறுதியில் ‘அரசன்’ இப்படத்தின் ஷூட்டிங் துவங்கிவிடும் என தகவல் வந்தது. ஆனால், தற்போது வரை படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது என்ற அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
அதாவது ‘அரசன் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24-ந்தேதி முதல் துவங்கும். தற்போது சிம்பு துபாயில் இருக்கின்றார். விரைவில் அவர் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை வருகை தருகிறார்’ என கூறியுள்ளார்.
சிம்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘அரசன்’ கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த கெட்டப்பில் சிம்பு செம ஸ்டைலாகவே இருக்கின்றார். அந்த கெட்டப்பில் தான் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார். படத்தில் சிம்பு இரண்டு கெட்டப்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கெட்டப்பில் தான் சிம்பு தற்போது இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக, மூன்றே மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடலாம் எனவும், வெற்றிமாறனின் முந்தைய படங்களை போல இல்லாமல் ‘அரசன்’ படம் குறுகிய காலகட்டத்திற்குள் முடிக்கப்படும் ஒரு படமாகும் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.