வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயனின் நியூ லுக்..

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள்.

இங்குதான் விஜய்யின் ‘கோட்’ படத்துக்காகவும் வெங்கட் பிரபு சென்றார். இங்கு உடல் மற்றும் முகம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டும். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் இளமையான தோற்றத்துகாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

- Advertisement -

இதனையடுத்து தற்போது எஸ்கே படத்தையும் இந்த முறையில் உருவாக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கிளீன் ஷேவ், மீசை இல்லாத லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு படத்தில் இந்த தோற்றத்தில் தான் எஸ்கே நடிக்கவிருக்கிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருடைய இந்த லேட்டஸ்ட் லுக் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

பராசக்தி படத்துக்கு பின்பாக எஸ்கேவின் லைன்அப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இருந்தனர். இவர்கள் இருவருமே எஸ்கேவின் கால்ஷீட்டுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் படம் தள்ளிப்போவதால், அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றவாறு இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சயின்ஸ் பிக்சன் கலந்த டைம் டிராவல் படமாக ‘எஸ்கே 26’ உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘பராசக்தி’ ஆடியோ லான்ச்சை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதுக்குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

historySivakarthikeyanstoryபராசக்திவெங்கட் பிரபு