‘பைசன்’ படம் பார்த்து, வைகோ பாராட்டு: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

இந்நிலையில். ‘பைசன்’ படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவ்வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

‘நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா. இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள். நான் இங்கிருந்தே பெரும் மனநிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துகள்’ என பாராட்டியுள்ளார்.

அதற்கு, நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

vaiko praises the movie bison movie
‘பைசன் காளமாடன்’bison moviedirector mari selvarajvaikoதுருவ் விக்ரம்