Browsing tag

‘பைசன் காளமாடன்’

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ‘பைசன்’ திரைப்படம். தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் […]

‘பைசன்’ படம் பார்த்து, வைகோ பாராட்டு: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது. இந்நிலையில். ‘பைசன்’ படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் […]

‘பைசன்’ திரைப்படம் பார்த்து, அண்ணாமலை வெளியிட்ட பதிவு..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் காண்போம்.. ‘இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஓர் அற்புதமான, உணர்வுப்பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், […]

மாரி செல்வராஜ் சர்ச்சைப் பேச்சுக்கு, நெட்டிசன்கள் கருத்து..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பைசன் காளமாடன்’ படம் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நிலையில், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு உதாரணம் கூறுகிறேன் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் பேசியது குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். அதாவது மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், பைசன் போன்ற படங்களில் வெள்ளையாக இருக்கும் கேரள நடிகைகளுக்கு கருப்பு மேக்கப் போட்டு […]

ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவுறுத்தல்..

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருநெல்வேலியில் இந்த படம் ஓடும் ஒரு திரையரங்கில் துருவ் விக்ரம், அனுபமா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜ் வந்தார். அப்போது படக்குழு பேசிக் கொண்டிருந்தபோது படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் ஆடிக் கொண்டும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாரி செல்வராஜ் […]

‘பைசன் காளமாடன்’ களத்தில் வென்றானா? தோற்றானா?: திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றியவர் ராம். இவரிடம் பணியாற்றிய மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படம் இயக்கி கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ உதயநிதி-வடிவேலு நடிப்பில் ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ என தனித்த முத்திரையை தொடர்ந்தார். பணம்- புகழைக் கடந்து என் மக்களுக்காக நல்லவை சொல்ல விழைகிறேன் என்ற முனைப்பில் இவர் உருவாக்கி தற்போது வெளியாகி இருக்கிறது ‘பைசன் காளமாடன்’ அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மணத்தி கணேசன் […]

2 வருடம் கடும் உழைப்பு: ‘பைசன்’ துருவ் விக்ரம் அப்டேட்ஸ்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்​ரம் ஹீரோவாக நடித்​துள்ள ‘பைசன்: காள​மாடன்’ பட ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தென்மாவட்ட வட்டார மொழியில் கபடி விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்​படத்​தில் அனுபமா பரமேஸ்​வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்​மென்ட் தயாரித்​துள்ளது. இப்படம் வருகிற 17-ந்தேதி வெளி​யாகிறது. ‘பைசன்’ படம் பற்றி துருவ் விக்​ரம் தெரிவிக்கையில், ‘இது ஸ்போர்ட்ஸ் டிராமா கதை. திருநெல்​வேலி அருகே கதை […]

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் ரிலீசுக்கு முன்பே, செம கலெக்‌ஷன்..

‘வாழை’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘பைசன் காளமாடன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. படத்தில் கபடி வீரனாக நடித்துள்ளார் துருவ் விக்ரம். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை […]

தீபாவளி பண்டிகையில், மோதும் 3 திரைப்படங்கள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய கோலிவுட் வட்டாரத் தகவல்கள் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சில படங்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் […]