2 வருடம் கடும் உழைப்பு: ‘பைசன்’ துருவ் விக்ரம் அப்டேட்ஸ்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்​ரம் ஹீரோவாக நடித்​துள்ள ‘பைசன்: காள​மாடன்’ பட ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தென்மாவட்ட வட்டார மொழியில் கபடி விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்​படத்​தில் அனுபமா பரமேஸ்​வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்​மென்ட் தயாரித்​துள்ளது. இப்படம் வருகிற 17-ந்தேதி வெளி​யாகிறது.

‘பைசன்’ படம் பற்றி துருவ் விக்​ரம் தெரிவிக்கையில், ‘இது ஸ்போர்ட்ஸ் டிராமா கதை. திருநெல்​வேலி அருகே கதை நடக்கிறது. இதற்காகக் கதை நடக்​கும் கிராமத்துக்கே சென்று தங்​கி, அங்குள்ளவர்களு​டன் பழகி, இதில் நடித்துள்ளேன். முன்னதாக பல மாதங்கள் கபடி பயிற்சி மேற்​கொண்​டேன். இப்படத்​துக்​காக 2 வருடங்களுக்கு மேல் திருநெல்​வேலி பகுதியிலேயே வசித்ததால், இப்போதும் அந்த பேச்சு வழக்​கு​தான் வரு​கிறது.

கதைக்​காக அத்​லெட்டிக் பயிற்சி பெற்றேன். நிஜ​மான ஒரு கபடி வீர​ராக இந்தப் படத்​தில் பங்கேற்​றேன். என்னுடன் விளையாடிய​வர்​கள், என்னை ஒரு நடிகனாகவோ, நடிகர் விக்​ரம் மகனாகவோ பார்க்​க​வில்​லை. அவர்​களில் ஒரு​வ​னாகவே பார்த்​து, அப்​படியே நடந்து​ கொண்​டார்​கள்.

அங்கு எல்​லோருமே கபடி விளை​யாடு​கிறார்​கள். நான் புதி​தாகக் கற்​றுக் கொள்​கிறவன் என்​ப​தால் எனக்​குக் காயங்​களும் ஏற்​பட்​டன. கபடி பயிற்சி முடிந்​து, நீச்​சல், மண் வெட்டுவது, மரம் வெட்​டு​வது, மாடு மேய்ப்​பது, ஆடு மேய்ப்​பது உள்​ளிட்ட வேலைகளைச் செய்​யச் சொன்​னார் இயக்​குநர். அதைச் செய்​தால், கபடி விளை​யாடு​வது இன்னும் இயல்​பாக மாறும் என்​ற​தால், அதைச் செய்​தேன். முதலில் எனக்கு அது சவாலாக இருந்​தது. பிறகு பழகி விட்​டது. அதை அனுப​வித்து செய்​தேன்.

இந்​தப் படத்​துக்​காக நிறைய உழைத்திருக்கிறேன். என்னை நிரூபிக்க வேண்​டி​யிருப்​ப​தால். அதற்​கான உழைப்பைக் கொடுத்திருக்​கிறேன். இந்​தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்​குப் பிடிக்கும்’ என்றார் நம்பிக்கையுடன் துருவ்​ விக்​ரம்​.

சீயான் விக்ரம்க்கு ‘சேது’ போல, துருவ்க்கு ‘பைசன்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhruv vikram made athlete training for bison film
‘பைசன் காளமாடன்’actor dhruv vikrambison moviedirector mari selvarajதுருவ் விக்ரம்