தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு..!

தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

The Verdict’s release date and poster released

வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுபாஷினி, வித்யுல்லேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தி வெர்டிக்ட். எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான கிருஷ்ண சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது இது ஒரு கொலை மர்ம விசாரணையில் பரபரப்பான உலகத்தையும் அமெரிக்காவில் நீதித்துறை செயல்முறையும் ஆராய்கிறது. பழக்கமான படங்கள் போல் இல்லாமல் இது பார்வையாளர்களை கவர்ந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.

அக்னி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

poster releasedrelease dateThe VerdictThe Verdict's release date and poster releasedசுபாஷினிவரலட்சுமி சரத்குமார்வித்யுல்லேகா ராமன்ஸ்ருதி ஹரிஹரன்