மே 1-ந்தேதி ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி அரசு விடுமுறை என்பதால், அன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அது குறித்த விவரம் பார்ப்போம்..

ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதலும் மோதலும் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

டூரிஸ்ட் பேமிலி: இப்படமும் மே 1-ந்தேதி திரைக்கு வர உள்ளது. புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார்-சிம்ரன் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர்.

ஹிட்-3: இப்படம், பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸாக உள்ளது. இப்படத்தை சைலேஷ் கொலானு இயக்கி உள்ளார். நானி ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ‘கேஜிஎஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்துள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படமும், வருகிற மே 1-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.

வீரம்-பில்லா: குறிப்பாக, மே 1-ந்தேதி ‘தல’ அஜித்குமாரின் பிறந்த நாள் என்பதால், அன்று, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படமும், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரவேற்பு பெற்ற ‘பில்லா’ திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆகிறது. ஆக ‘தல’ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

'ரெட்ரோ' படம்actor ajith kumaractor suriyaretro movieஅஜித்குமார்