கைவிட்டு விடாதீர்கள், என் ‘வீட்டம்மா’ என்னை கலாய்த்து விடுவார்: நாக சைதன்யா ருசிகர பேச்சு..

சில தோல்விகளுக்கு பின்னர் வெளிவரும் ‘தண்டேல்’ திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா பேசிய ருசிகர தகவல் பற்றிக் காண்போம்..

சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு, சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாகசைதன்யா கடந்த ஆண்டு இறுதியில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், 2-வது மனைவி வந்த நேரம் நாகசைதன்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கிடைக்கும் என குடும்பமே காத்திருக்கிறது. தனது 2-வது மனைவியான சோபிதா துலிபாலாவின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘தண்டேல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா,

‘தனது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும், விசாகப்பட்டினத்தில் ஓடியதா? என்று தான் முதலில் பார்ப்பேன்.

இங்கே ஓடினால், உலகம் முழுவதும் அந்த படம் வெற்றி அடைந்துவிடும் என்பது எனது நம்பிக்கை. தயவு செய்து இந்த முறையும் எனக்கு விசாகப்பட்டினம் மக்கள் கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். இல்லையென்றால், ‘வீட்டம்மா’ என்னை கலாய்த்து விடுவார்’ என பேசியுள்ளார்.

அமரன் வெற்றிக்குப் பிறகு சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்திலும் ஹீரோ தேசப்பற்றுடன் இருப்பதால் ரசிகர்களை கனெக்ட் செய்துவிடும் என நம்பியுள்ளனர். முன்னதாக வெளியான சில படங்கள் நாக சைதன்யாவுக்கு வெற்றியாக அமையவில்லை.

இச்சூழலில், இந்தியில் ‘ராமாயணா’ படத்தில் சீதையாகவும் சாய் பல்லவி நடித்து வரும் நிலையில், நாக சைதன்யாவுக்கு இந்த படம் பான் இந்தியா வெற்றியை கொடுக்க சாய் பல்லவி முக்கிய காரணமாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, சென்டிமென்ட் காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், ஸ்கிரிப்ட் சரியாக இருந்து, அது திரையில் சலிப்பை தராது அமைந்தாலே போதும், எந்த படமும் வெற்றிதான்’ என்பதே மாறாத சினிமா வரலாறு.!

'ராமாயணா'actor naga chiatanyaactress sai pallavithandel movieசமந்தா