Browsing tag

story

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு, அக்‌ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. நாயகியாக அனந்தா இணைந்துள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு […]

நானி நடிப்பில், கலகக்காரன் தலைவனாகும் கதை: 8 மொழிகளில் வெளியாகிறது..

நானி நடித்து வரும் ‘த பாரடைஸ்’ படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்குகிறார். ‘தசரா’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராகவ் ஜூயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். . முன்னதாக வெளியான இப்படத்தின் டீசர் தெரிவிக்கையில், ‘வரலாற்றில், எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒரே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு […]

28 ஆண்டுகளுக்கு பிறகு, கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி ரீஎன்ரி..

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ், அவருடைய சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை விஷால், எஸ்.ஜே.சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர். இப்படத்தில் 1980 […]

‘கைதி-2’ கதைக்களம் குறித்து, இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனது ப்ராஜெக்டான ‘கைதி 2’ குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கைதி’ தொடங்கும்போது, அதன் தொடர்ச்சியாக படங்கள், எல்.சி.யூ போன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அந்தப் படமே ஒரு முடிவே இல்லாமல்தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஒரு ஐடியா எழுதி பின்பு […]

கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்: தனுஷ் கண்டனம்..

‘ராஞ்ஜனா’ என்ற படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு ஆக.1-ம் தேதி தமிழில் ரீ ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், ரீ-ரிலீஸில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் படத்தின் […]

36 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர், அமீர்கான் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. […]

நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘நீலி’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இபடத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில், மனோ உதயகுமார் தயாரிக்கிறார். நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். இப்படம் அவர் கூறும்போது, ‘அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது […]

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும்,KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் […]

‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவை வேற மாதிரி பார்க்கலாம்: பகத்பாசில் அப்டேட்..

நாளை ரிலீஸாகும் ‘மாரீசன்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ரோடு டிராமா ஜானரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். ‘மாமன்னன்’ பட வெற்றியை தொடர்ந்து வடிவேலு, பகத்பாசில் இருவரும் ஜாலியான ஸ்கிரிப்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘மாரீசன்’ படத்தில் சீரியஸான ரோலில் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம், நாளை வெளியாகிறது. காமெடி படமாக இல்லாமல் முற்றிலும் வேறு விதமான திரைக்கதையில் இப்படம் உருவாகி […]

பெருமளவு ரசிகர்களை ஈர்த்த ‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட அப்டேட்ஸ்..

பிரமாண்டமும் கவனம் ஈர்க்கும் கதையும் கலந்தால், ரசிகர்களுக்கு உற்சாகம்தானே. அவ்வகையில் ‘கேஜிஎஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்திய அளவில் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த கன்னட சினிமா ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது. ‘காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து அதன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. […]