‘கைதி-2’ கதைக்களம் குறித்து, இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனது ப்ராஜெக்டான ‘கைதி 2’ குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில்,

‘கைதி’ தொடங்கும்போது, அதன் தொடர்ச்சியாக படங்கள், எல்.சி.யூ போன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அந்தப் படமே ஒரு முடிவே இல்லாமல்தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஒரு ஐடியா எழுதி பின்பு விட்டுவிட்டோம்.

‘விக்ரம்’, ‘லியோ’ என எல்.சி.யூ படங்கள் வந்த பிறகு, ‘கைதி 2’ என்பது பல கதாபாத்திரங்கள் அடங்கியதாக இருக்கிறது. ஆகையால் ‘கைதி 2’ ஒரு நல்ல கதையாக அமைந்திருக்கிறது. அதன் கதையாக 30-35 பக்கங்கள் எழுதி இருக்கிறேன். ‘கூலி’ வெளியானவுடன் நல்ல நாள் பார்த்து அதனை ஆரம்பிக்க வேண்டும். எல்.சி.யூ படங்களில் என்னால் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏதோ ஒரு வகையில் கதையில் கொண்டுவர முடியும்.

புதிய கதையில் 20 நிமிடத்துக்குள் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். இப்போது எல்.சி.யூ-வில் அனைத்து கதாபாத்திரங்களுமே மக்களுக்கு பரிச்சயமானவை. ஆகையால், அவற்றை அறிமுகப்படுத்தும்போது அவர் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். அவ்வகையில், கூலி-2 படம் உருவாகுமோ?. பொறுத்திருந்து பார்ப்போம்.

kaithi 2 movie story in director lokesh kanagaraj explain
director lokesh kanagarajRajinikanthstoryகைதி 2ரஜினிகாந்த்