நானி நடிப்பில், கலகக்காரன் தலைவனாகும் கதை: 8 மொழிகளில் வெளியாகிறது..

நானி நடித்து வரும் ‘த பாரடைஸ்’ படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்குகிறார். ‘தசரா’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராகவ் ஜூயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். .

முன்னதாக வெளியான இப்படத்தின் டீசர் தெரிவிக்கையில், ‘வரலாற்றில், எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒரே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த அந்தக் காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் பிணங்களின் அழுகை.

‘தாயின் மார்பகத்திலிருந்து பாலில் அல்ல, இரத்தத்தில் வளர்க்கப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்றவைத்தது, அது முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலத்தில் சிறுமைப்படுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் வாள்களை வைத்திருக்கின்றன. அந்தக் காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞன் தலைவனாக மாறிய கதை இது’. என தெறிக்கிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய 8 மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது, நானியின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டு உள்ளது. ‘ஜடால்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், இதுவரை தோன்றாத வேடத்தில் நடிக்கிறார். இப்படம், அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி ரிலீஸாகிறது.

actor nani the paradise film to release in 8 languages
actor nanifansstoryஅனிருத்த பாரடைஸ்