தி பாரடைஸ் படத்துக்கு டிரைலர் கிடையாது – நடிகர் நானி
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீடு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசுகையில், “படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதி படம் வெளியாகும். படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” […]