நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ’தி பாரடைஸ்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. நானி நடிக்கும் இப்படம் அடுத்த வருடம் மார்ச் 26-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.

தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தற்போது சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ’தி பாரடைஸ்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

actor naniparadise moviestoryதி பாரடைஸ்நானி