நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ’தி பாரடைஸ்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. நானி நடிக்கும் இப்படம் அடுத்த வருடம் மார்ச் 26-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை […]