ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


jananayagan movie story details update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

H. வினோத் இயக்கத்திலும்,KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக தளபதி விஜய் இந்த படத்தில் நடித்திருப்பதாகவும்,இது மட்டுமில்லாமல் தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்புவது குறித்து மக்களுக்கான அட்வைஸ் செய் வழங்குவது போலவும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


jananayagan movie story details update
detailsjananayagan moviejananayagan movie story details updatestoryupdateதளபதி விஜய்பாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமீதா பைஜூஜனநாயகன்