நாளை ரிலீஸாகும் ‘மாரீசன்’ படத்தின் தகவல்கள் காண்போம்..
ரோடு டிராமா ஜானரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். ‘மாமன்னன்’ பட வெற்றியை தொடர்ந்து வடிவேலு, பகத்பாசில் இருவரும் ஜாலியான ஸ்கிரிப்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘மாரீசன்’ படத்தில் சீரியஸான ரோலில் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம், நாளை வெளியாகிறது.
காமெடி படமாக இல்லாமல் முற்றிலும் வேறு விதமான திரைக்கதையில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘மாரீசன்’ படம் குறித்து பகத் பாசில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
‘இந்த படத்தின் ஸ்கிரிப்டை மலையாளத்தில் கேட்டேன். தமிழில் வடிவேலு சார் ஓகே சொன்னால் மட்டும் பண்ணுவோம் என திட்டவட்டமாக நான் சொன்னேன். காமெடி படம் பண்ணலாம்னு நாங்க நினைச்சோம். ஆனால், மாரீசன் கதை வடிவேலு சாருக்கு ரொம்ப பிடிச்சது. அவரை வேற மாதிரியான கோணத்துல இப்படத்தில் பார்க்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியான இந்த படத்தின் டீசர், டிரெய்லர் போன்ற அப்டேட்கள் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது. இதனால், என்ன மாதிரியான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இப்படத்தில் சித்தாரா, கோவை சரளா, ரேணுகா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, விவேக் பிரசன்னா, தேனப்பன் உள்பட பலர் இணைந்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். நாளை பார்க்கலாம்.