‘மகுடம்’ படத்திற்கு இயக்குநர் ஆனது ஏன்?: விஷால் விளக்கம்..
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. அதன் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, அப்படத்தினை விஷாலே இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. படப்பிடிப்பு தளத்தில் விஷால் இயக்கும் வீடியோ பதிவு காட்சிகள் இணையத்தில் வெளியானது. தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு, ‘மகுடம்’ படத்தை தான் இயக்கி வருவதை விஷால் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சிறப்பான நாளில், எனது புதிய படமான […]