பெருமளவு ரசிகர்களை ஈர்த்த ‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட அப்டேட்ஸ்..

பிரமாண்டமும் கவனம் ஈர்க்கும் கதையும் கலந்தால், ரசிகர்களுக்கு உற்சாகம்தானே.

அவ்வகையில் ‘கேஜிஎஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்திய அளவில் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த கன்னட சினிமா ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது.

‘காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து அதன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் காந்தாரா அத்தியாயம்-1 என படத்தின் மேக்கிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உ.ள்ளது. ‘காந்தாரா உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன்’ என மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

பிரம்மாண்ட செட்டுகள், மாபெரும் மக்கள் கூட்டத்தை வைத்து படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. இப்படத்தின் ஷுட்டிங் 250 நாட்கள் நடந்துள்ளதாக ரிஷப் தெரிவித்துள்ளார். தற்போது, இந்த கிளிம்ப்ஸ் வீடியோ மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. .

அரசியல்வாதிகள் சிலர் போலீசின் துணையுடன் வனத்தை அபகரிக்க திட்டமிட, நாயகன் உள்ளூர் மக்களுடைய உதவியுடன் வனத்தை போராடி மீட்பதே ‘காந்தாரா’ படத்தின் கதை. இப்படத்தில் பழங்குடி மக்களின் தெய்வமாக ரிஷப் ஷெட்டியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில், ‘காந்தாரா’ படத்துக்கு முன் நடக்கும் சம்பவங்களாக அதன் முதல் பாகத்தினை இயக்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘காந்தாரா முதல் அத்தியாயம்’ வரும் அக்டோபர் 2-ந்தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kantara movie chapter 1 glimpse video impresses fans
'கேஜிஎஃப்'kantara movie chapter 1kgf moviestoryகாந்தாரா