Browsing tag

story

கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டாம்: ‘பேட் கேர்ள்’ பட இயக்குநர் பேச்சு..

‘பேட் கேர்ள்’ படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் என்பது தெரிந்ததே. இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி அதுவே பெரிய விளம்பரமாகவும் ஆகியுள்ளது. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில, நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் குறித்து, இயக்குநர் வர்ஷா பரத் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பேட் கேர்ள் படத்தை தயாரித்தவர்கள், படத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், டிரெய்லரை வெளியிட்டவர்கள் உள்பட அனைவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராக இருப்பதாக லோகேஷ் பேசியிருந்தார். அதற்கான தன் லுக்கையும் லோகேஷ் மாற்றவுள்ளார். மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்த மிர்னா, தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ‘ஜெயிலர்-2’ படத்திலும் நடித்து வருகின்றார். இவர், லோகேஷ் ஹீரோவாக நடிக்கப்போகும் படத்தில் கமிட்டாகி இருப்பதாக […]

மனைவிகளால் ஏற்படும் மன அழுத்தங்களை பிரதிபலிக்கும் ‘ப்ரோகோட்’ டீசர், வைரல்..

ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்துக்கான அறிமுக டீசர் ஒன்றை […]

50 நடிகைகள் என்னை புறக்கணித்தனர்: கேபிஒய்.பாலா வேதனை..

கேபிஒய் பாலா ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எப்படி நடந்ததென்றால், அலுவலகத்தில் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ? என்று கேட்பார்கள். பாலா என்று சொன்னதும் நான் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அது அவர்கள் மீதான தவறு கிடையாது. இப்படியே ஒவ்வொரு புறக்கணிப்பாக நடந்து கொண்டிருந்தது. இப்படியே 50 பேர் என்னை புறக்கணித்தனர். நானும் […]

‘அந்த 7 நாட்கள்’ புதிய படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பேச்சு..

கே.பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா நடிப்பில் வெளியான பழைய திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. தற்போது அறிமுக இயக்குநர் எம்.சுந்தர் இயக்கியுள்ள ‘அந்த 7 நாட்கள்’, கே.பாக்யராஜிடம் தலைப்பை அனுமதி வாங்கி பயன்படுத்தி உள்ளனர். காதல் படமான இதில் அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் […]

‘அழகர் யானை’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் விளக்கம்..

‘அழகர் யானை’ பட பூஜை முடிந்து, தற்போது படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் கதைக்களம் பற்றி இங்கே காண்போம்.. ’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் அடுத்து இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். குறிப்பாக, 80 அடி உயர யானை ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. ’அழகர் யானை’ குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன், தெரிவிக்கையில், ‘இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை […]

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் ‘ஆர்யன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ‘ஆர்யன்’ படத்தினை திரையிட்டு காட்டியுள்ளார் விஷ்ணு விஷால். அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ப்ரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்பட பலர் விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக விஷ்ணு […]

ஜீத்து மாதவன் இயக்கத்தில், சூர்யாவின் 47-வது திரைப்படம்..

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை பற்றிக் காண்போம்.. சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் முக்கியமான ஒரு ரோலில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த சஜின் கோப்புவும் […]

ஏன் இந்த எண்ணம்?: சினிமாக்காரர்கள் மீது, இயக்குநர் பேரரசு ஆதங்கம்..

கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இயக்குநர் முருகராசு இயக்கியுள்ள இப்படம் கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, கடுக்கா என்றால் காய் இல்லை, நம்பவைத்து ஏமாற்றுவதுதான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் […]

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான […]