சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை பற்றிக் காண்போம்..
சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் முக்கியமான ஒரு ரோலில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த சஜின் கோப்புவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜீத்து மாதவனின் ‘ரோமாஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ என இரு படங்களிலும் முக்கியமான ரோலில் நடித்து மலையாள திரையுலகில் புகழ்பெற்றார் சஜின் கோப்பு. இவர் தமிழில் சூர்யாவுடன் நடிக்கவிருப்பதாக வந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
மேலும், இப்படத்தில் சூர்யா போலீஸ் ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, வெளியான தகவலின்படி, இப்படம் அரசியல் கதைக்களத்தில் தயாராக இருப்பதாகவும், காமெடி, எமோஷன்ஸ், ஆக்சன் என அனைத்தும் சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அவரின் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான ‘ரெட்ரோ’ அவருக்கு ஓரளவிற்கு வெற்றியை தேடித் தந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து கருப்பு, சூர்யா 46, சூர்யா 47 ஆகிய படங்களும் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் சூர்யா ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.