கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார்

‘வீர தீர சூரன்’ பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல் காண்போம்..

கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’ படத்தையும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ‘வீர தீர சூரன்’ பட இயக்குனர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், அருண்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அருண்குமார் இயக்கி வெளியான வீர தீர ‘சூரன்-2’ ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இதன் முதல் பாகமும் எதிர்பார்க்கப்படுகிறது.

actor kamal haasanactor suriyaActor Vikramகமல்ஹாசன்வீர தீர சூரன்