ஒருத்தன், ஆளே கலர்ஃபுல்லா மாறிட்டு வர்றான்னா.. அவனுக்குள்ள காதல் நுழைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம்’ அதாவது, விஷயம் என்னன்னா சூர்யா-44 படம் இப்டி..
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சூர்யா 44’. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்றதும், இப்படம் கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தார்கள்.
படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது கூட, இப்படம் ஒரு ஆக்சன் படமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இப்படம் ஒரு ‘காதல் படமாக’ உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார். படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவும் ‘சூர்யா 44’ ஒரு காதல் படம் தான் என்றார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியது.
பல வருடங்கள் கழித்து, சூர்யா மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்கின்றார் என்றதும், படத்தின் மீதான ஹைப் அதிகரித்தது. காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் வரிசையில் ஒரு அழகான காதல் படமாக ‘சூர்யா 44’ இருக்கும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சூர்யாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. க்ளீன் ஷேவ் லுக்கில் சூர்யா செம ஸ்மார்ட்டாக உள்ளார்.
அதைப் பார்த்ததும் ரசிகர்கள், ‘வாரணம் ஆயிரம் படத்தில் வரும் சூர்யாவை போல மாறிவிட்டாரே’ என கூறி வருகின்றனர்.
மேலும், படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஜோதிகாவும் நடித்தால் இன்னும் செமையாக இருக்குமே’ என ஆர்வத்தோடு கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். இது குறித்து இயக்குனர் பரிசீலனை செய்வாரா?