சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Superstar Rajinikanth’s new movie update..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும் எச். வினோத் மற்றும் எஸ்.யூ அருண்குமார் ஆகியோர் அந்தப் படத்தை இயக்க ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த அடுத்த உருவாகும் படங்கள் குறித்த அப்டேட் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கூட்டணி குறித்து உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Superstar Rajinikanth’s new movie update..!
CoolieJailer2new movieSuperstar RajinikanthSuperstar Rajinikanth's new movie update..!tamilcinemaupdateஎச்.வினோத்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ரஜினிரெட் ஜெயன்ட்ஜெயிலர் 2