எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது.
str 49 movie promo video viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து பாடங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிற.
இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படம் வடசென்னை படத்தை மையப்படுத்தி எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது. இதில் சிம்பு மாஸ் லுக்கில் கையில் கத்தியுடன் மிரட்டலாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.