‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேபி இன்போடெயின்மென்ட் (KP Infotainment) சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்குகிறார். காதல், குற்றம், அதிரடி என மூன்று அம்சங்களும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கதை, ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இப்படத்தில் அஜய் கார்த்திக்கு ஜோடியாக தீபா பாலு துடிப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இயக்குநரும் நடிகருமான A. வெங்கடேஷ், மலையாளத் திரைப்படமான ‘திரிடம்’ மூலம் கவனம் ஈர்த்த தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன், பிரகாஷ், சோபியா மற்றும் சப்பாணி பாய்ஸ் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளன. இதற்காகச் சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. காட்சிகள் இயல்பாகவும், நம்பகத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டு, அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வலுவான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன், காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘STATION – Hunt For Survival’ திரைப்படம் உருவாகி வருகிறது.