விஜய் சேதுபதிக்கு பதிலாக சூரி: ‘அயலான்’ பட இயக்குநர் திட்டம்..

‘மாமன்’ படத்திற்கு பிறகு சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘அயலான்’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்குவதாக இருந்தார் ரவிக்குமார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இறுதியாக, தற்போது சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

சூரி-ரவிக்குமார் இணையும் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதன் பணிகளை முடித்துவிட்டு, ரவிக்குமார் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் சூரி.

இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சில தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன்வந்தாலும், சூரியின் தேதிகள் முடிவானவுடன் அடுத்த கட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. அதற்கு பிறகு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

soori will be acting in a film directed by ravikumar
actor sooristoryVijay Sethupathiசூரிமண்டாடி