திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சியாக நடிக்கலாம்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “திருமணம் என்பது நடிகைகளின் திறமைக்கும், நடிப்புப் பயணத்துக்கும் தடையாக இருக்கக் கூடாது. திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும். எனது திரைப்பயணத்தில் நான் தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருகிறேன். எந்தவொரு விமர்சனமும் என்னைப் பாதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்தக் கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

rakul preet singhRakul Preet Singh Marriage Is No Bar to Glamorous Roles