Browsing tag

மண்டாடி

சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!

R.S. இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் *மண்டாடி* திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முன்னிலையில் உருவான இந்த படம், நீண்ட மற்றும் சவாலான ஷூட்டிங்குக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடினமான சூழலில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கதையின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் அனைத்தும் மிகத் துல்லியமாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

கோடிகளில் எகிறிய மார்க்கெட்! முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் சூரி!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நாயகனாக வலம் வரும் சூரி, தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பள உயர்வு: ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தில் அறிமுகமாகி இன்று முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரி, தற்போது இயக்குநர் ஆர். ரவிக்குமார் (இன்று நேற்று நாளை, அயலான் புகழ்) இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்காக அவருக்கு சுமார் 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னேற்றம்: […]

இரண்டு வேடங்களில் அதர்வா நடிக்கும் ‘வலை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்​களை இயக்​கிய​வர். ரூபா மஞ்​சரி, வாணி போஜன், முரளி சர்​மா, ஆடு​களம் நரேன், அர்​ஜாய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராது இன்ஃ​போ டெ​யின்​மென்ட் சார்​பில் பெப்சி வி.எஸ்​.​பால​முரளி தயாரித்​துள்ள இப்படத்துக்கு ஜிப்​ரான் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி ஜீவா சங்​கர் கூறும்​போது, ‘ராமேஸ்​வரம் பின்னணியில் இப்​படம் உரு​வாகியுள்​ளது. […]

விஜய் சேதுபதிக்கு பதிலாக சூரி: ‘அயலான்’ பட இயக்குநர் திட்டம்..

‘மாமன்’ படத்திற்கு பிறகு சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘அயலான்’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்குவதாக இருந்தார் ரவிக்குமார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இறுதியாக, தற்போது சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. சூரி-ரவிக்குமார் இணையும் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் […]

சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் மண்டாடி படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூரி நடிப்பில் அடுத்ததாக மண்டாடி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் […]

விஜய்யின் முழுநேர அரசியல் பிரவேசம் குறித்து, சூரி கருத்து..

நடிகர் சூரி கதையெழுதி நடித்த ‘மாமன்’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘மண்டாடி’ படப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், ‘மாமன்’ படத்துக்குப் பின் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். கண்டிப்பாக புதிதாக இருக்கும். தொண்டி அருகே நடக்கும் படகு ரேஸை பின்னணியாகக் கொண்டிருக்கும். […]

ஒரே படத்தில் ஹீரோ & வில்லனாக நடிக்கிறார் சூரி..

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்த ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்து கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ‘கருடன்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றன. தற்போது ‘மாமன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி ரிலீஸாக உள்ளது மேலும், சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு […]