சீதா எடுத்த முடிவு, விஜயா வீட்டுக்கு வந்த மணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் விஷயத்தில் சீதா முடிவெடுக்க விஜயாவின் வீட்டுக்கு மணி வந்துள்ளார்.

siragadikka asai serial today episode update 30-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருனிடம் எங்க மாமாவோட விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது எங்க அக்காவும் மாமாவும் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க உங்களோட பிடிவாதத்துனால அவங்க பிரியக்கூடாது. நீங்க என்ன மறந்துடுங்க என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார். அருண் சீதாவிடம் நீ என்ன மறந்து இருக்க முடியுமா என்று கேட்க சீதா எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விடுகிறார் வெளியில் அருண் அம்மா வர சீதா என கூப்டும் அவர் அழுது கொண்டே சென்று விட என்னாச்சு அருண் என்று உள்ளே வந்து கேட்கிறார் நீ ஏதாவது திட்டினையா என்று கேட்க திட்றதுக்கு நான் யாருமா என்ன மறந்திடுன்னு சொல்லிட்டு போறா என்று சொல்ல என்னடா சொல்ற என்று கேட்க அருண் எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்று விடுகிறார்.

மறுபக்கம் முத்து சீதாவுக்காக பார்த்த மாப்பிள்ளை வேலை செய்யும் ஆபீசுக்கு வந்து அவரைப் பற்றி விசாரிக்க ஒருவர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்லுகிறார் மற்றொருவர் குடிப்பழக்கம் இருப்பதாக சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் அவருக்கு இரண்டு லவ் பெயிலியர் ஆயிருக்கு பொய் அதிகமா சொல்லுவாரு என்று சொல்வதெல்லாம் கேட்டு முத்து இதை போய் மீனா கிட்ட சொன்னா உங்களுக்கு ஏத்த ஆளப்பார்த்து முடிச்சிட்டீங்களான்னு கேப்பா இது செட் ஆகாது என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மறுநாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்ப வாசலில் கறிக்கடைக்காரர் மணி நிற்க முத்து மலேசியா மாமா வந்திருக்காரு எல்லாரும் வாங்க வாங்க என கத்தி கூப்பிடுகிறார் உடனே வீட்டில் இருக்கும் அனைவரும் வர அவர் வெளியே நின்று கொண்டிருக்கிறார்.

விஜயா இந்த ஆள் எதுக்கு இப்ப வந்து இருக்கான் என்று கேட்க அண்ணாமலை அவரை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறார். அவரைப் பேசவிடாமல் விஜயா இது என்ன குடும்பமா இல்ல நாடக கம்பெனியா இந்த மானங்கெட்டவ தான் நடிக்க சொன்னானா உங்க வயசுக்கு அவளுக்கு நீங்க அட்வைஸ் பண்ணி இருக்கணும் அதை விட்டுட்டு மலேசியாவே உங்களுக்கு சொந்தம் என்ற மாதிரி பேசினீங்க என்று கோபப்படுகிறார். சரி நடந்துதெல்லாம் போகட்டும் விடு விஜயா என்று சொல்லிவிட்டு நீங்க என்ன விஷயமா வந்தீங்க என்று கேட்கிறார்.பரசு விஷயமா தான் பேச வந்தேன் என்று சொல்ல,பரசு விஷயமா என்ன என்று கேட்கிறார் நான் பண்ணது பெரிய தப்பா ஆயிடுச்சு எனக்கு இருந்த மரியாதை எல்லாம் போயிடுச்சு என் தங்கச்சி மாப்பிள்ளை எல்லாரும் என்ன தப்பா நினைச்சுட்டாங்க நீங்க வந்து நான் உங்க குடும்பத்துல மன்னிப்பு கேட்டதா சொன்னீங்கன்னா குடும்பத்தில் பிரச்சனை இல்லாம இருக்கும் என்று சொல்லுகிறார்.

உடனே அண்ணாமலையும் யோசித்து விட்டு சார் இதுக்கு மேல எந்த தப்பும் பண்ணாதீங்க பரசு கிட்ட பேசுறேன் என்று சொல்ல அவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்ப முத்து அவரை நிற்க வைத்து உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லி உன் மேல உங்களுக்கு ஏதாவது கோபம் இருக்கா என மண்டபத்தில் இருந்து உங்களை கூட்டிட்டு வந்து ஒண்ணுமே சொல்ல வெச்சது நான் தானே அதனால என்னோட கார் பிரேக் வயர் கட் ஆயிருக்கு நீங்க ஏதாவது பண்ணிங்களா என்று சொல்ல அப்படி எல்லாம் நான் பண்ண மாட்டேன் தம்பி அதுவும் நீங்களும் மீனாவும் இந்த குடும்பத்துக்கு ரொம்ப நல்லது பண்ணி இருக்கீங்க உங்களுக்கு எதுவும் ஆகவில்லையே என்று கேட்கிறார் எனக்கு எதுவும் ஆகல என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப போக உடனே கரியை எடுத்து வந்து மீனா விடம் கொடுக்க போக அவர் வேண்டாம் என சொல்லி விடுகின்றனர் பிறகு மணி கிளம்பி விடுகிறார்.

சீதா வீட்டுக்கு வர சந்திரா என்ன கேட்கிறார்?அதற்கு சீதா என்ன சொல்லுகிறார்? சத்யாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 30-05-25
episodeserialsiragadikka asaisiragadikka asai serial today episode update 30-05-25todayupdate 30-05-25சிறகடிக்க ஆசைமணிவிஜயா