அதிர்ஷ்டம் என்பது என்ன? அது இஷ்டம், நம்ம இஷ்டமல்ல.! அவ்வகையில், சிம்புவின் ரசிகைக்கு கிட்டிய அதிர்ஷ்டம் என்ன என பார்ப்போம்..
மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.
அதேபோல், சிம்பு தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது. இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகின்றார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிங்கப்பூரில் நடத்திய இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு பாடப்போகின்றார் என்ற அறிவிப்பு வெளியானதும், அங்குள்ள சிம்பு ரசிகர்கள் செம குஷி ஆனார்கள்.
சிம்பு மற்றும் யுவன் கூட்டணி எப்போதும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருவரும் கடைசியாக ‘மாநாடு’ படத்தில் இணைந்து பணியாற்றினர். படம் மெகா ஹிட் ஆனது.
இச்சூழலில், சிம்பு கலந்துகொண்டு பாடுகின்றார் என்ற அறிவிப்பு வந்த பின்னர், கச்சேரியின் டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்தன.
இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்பே சிம்பு, சிங்கப்பூர் சென்றார்.
கச்சேரியில் பாடுவதற்காக அவர், பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தகவல் தெரிந்ததும், சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கத்தின் வாசலில் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சிம்புவிடம் ஆட்டோ கிராஃப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில், கச்சேரியில், ‘மன்மதன்’ படத்தில் இடம் பெற்ற ‘மன்மதனே நீ கலைஞன் தான்..’ பாடலைப் பாடும்போது, சிம்பு, தான் அணிந்திருந்த ஜாக்கெட்டினை கழற்றி ரசிகர்களை நோக்கி வீசினார். அதனை கேட்ச் பிடித்த ரசிகையொருவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, உடனே அதனை போட்டுக் கொள்ளவும் செய்தார். அந்த ஜாக்கெட்டில் எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டிருந்தது.
தற்போது, இது தொடர்பான நிகழ்வுகள் இணையத்தில் வைரலாய் பரவி வருகின்றது. பலர் அந்த ரசிகையை அதிர்ஷ்டக்கார ரசிகை என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆம், இன்றைய ஜெனரேஷனுக்கு இதுவும் பெரிய அதிர்ஷ்டம் தான்.