நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல்

ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடிகை சிம்ரனின் நடனத்தை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வந்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்துள்ளார்.

நிஷாவின் நடனத் திறமையை அறிந்த தன்னார்வலர் ஆஷிக், அவரது நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, நிஷாவின் தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை பலருக்கும் தெரியப்படுத்தினார். அதோடு, தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் நடிகை சிம்ரனிடம் தெரிவித்தார்.

இதனை அறிந்த சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அப்போது, நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பாடலுக்கு அவருடனேயே இணைந்து நடனமாடி நிஷா மகிழ்ந்தார்.

மேலும், நிஷாவின் நீண்டநாள் கனவான புதிய சைக்கிளையும் சிம்ரன் பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதையடுத்து நிஷாவிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சிம்ரன், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் தனது கனவுகளை தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பின்தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தி ஊக்கமளித்தார்.

ஒரு சிறுமியின் முகத்தில் புன்னகையை மலரச் செய்ததுடன், அவரது எதிர்கால கனவுகளுக்கும் உறுதுணையாக நின்ற சிம்ரனின் இந்த மனிதநேய செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

actress simranActress Simran’s Heartwarming Humanitarian Gesture